- மடு ஊத்துப்பு காவடி திருவிழா
- கரம்பக்குடி முத்து
- கருப்புயா
- சுவாமி கோயில்
- கரம்பாக்குடி
- சித்திராய் திருவிழா
- முத்து கருப்புய சுவாமி கோயில்
- கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- கபு-கட்டு
- பாலி உத்துப்பு விழா
- முத்து கருப்புய சுவாமி
- கோவில்
கறம்பக்குடி, மே 11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் முத்து கருப்பையா சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பாலி எடுப்பு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று, அன்று முதல் மண்டாக படித்தார்கள் சார்பாக தினம்தோறும் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன அதனையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அன்று மது எடுப்பு விழா நடைபெற்று. அதன் பிறகு காவடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் செடல் காவடி, பால்குடம், பறவை காவடி உள்ளிட்ட ஏராளமான காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவின் இறுதி நிகழ்வாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் முத்துக்கள் முத்து கருப்பையா சுவாமி அருள் பெற்று வேண்டிக்கொண்டனர். குறிப்பாக கறம்பக்குடியில் நகரக் கழக அலுவலகம் ஒன்றிய அலுவலகம் கால்நடை மருத்துவமனை அனுமார் கோவில் அருகில் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், முத்து கருப்பையா சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post கறம்பக்குடி முத்து கருப்பையா சுவாமி கோயிலில் மது எடுப்பு காவடி திருவிழா appeared first on Dinakaran.
