×

பளியன்குடியில் மே 14ல் மக்கள் தொடர்பு முகாம்

தேனி, மே 10: தேனி மாவட்டத்தில் பளியன்குடி கிராமத்தில் வருகிற 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட உள்ளது.  உத்தமபாளையம் தாலுகா, மேலக்கூடலூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பளியன்குடியில் வருகிற 14ம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட உள்ளது. உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் இதர துறைகள் சார்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வருகிற 14ம் தேதியன்று பளியன்குடியில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் நேரில் மனுவாக அளித்து பயன்பெறலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

The post பளியன்குடியில் மே 14ல் மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Paliangudi ,Theni ,Melakudalur ,Uttampalayam ,Dinakaran ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...