×

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து தொடக்கம்

 

மார்த்தாண்டம், மே 8: இன்டர்லாக் பொருத்தும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து தொடங்கியது. மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்டர்லாக் பொருத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. ஒரு வழி பாதையில் பணி நடைபெறும் போது மறு வழியாக போக்குவரத்து நடந்தது. குலசேகரம் உண்ணாமலை கடை வழியாக வரும் வாகனங்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டது.

மறுபுறத்திலும் பணி நடைபெறும் போது இதை ஒரு வழியில் போக்குவரத்து விடப்பட்டு மேம்பாலம் வழியாக மறு வழி வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தது தொடர்ந்து இருவழி பாதையிலும் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் செல்வதை காண முடிந்தது.

The post மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Dinakaran ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...