×

கரூரில் பொதுவேலை நிறுத்தம் குறித்த ஆயத்த மாநாடு

கரூர், ஏப்.28: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த கரூர் மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற இந்த ஆயத்த மாநாட்டிற்கு எல்பிஎப் மாவட்ட செயலாளர் அப்பாசாமி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பழனிசாமி, ஜீவானந்தம், குப்புசாமி, பால்ராஜ், ஆனந்தராஜ், சுடர்வளவன், குணாளன், ராதிகா ஆகியோர் தலைமை வகித்தனர். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சுப்பிரமணியன், ரெங்கராஜ், வடிவேலன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு பேசினர்.

தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய சட்டங்கள் 29ஐ நான்கு சட்டங்களாக சுருக்கி, அமலாக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டிக்கும் வகையில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் சம்பந்தமாக ஆயத்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

The post கரூரில் பொதுவேலை நிறுத்தம் குறித்த ஆயத்த மாநாடு appeared first on Dinakaran.

Tags : Karur ,All India General Strike ,LPF District ,Appasamy ,Palaniswami ,Dinakaran ,
× RELATED மது அருந்தியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு