×

சனிக்கிழமைதோறும் மாவட்ட மைய நூலகத்தில் குரூப் -4க்கான மாதிரி போட்டித்தேர்வு

கரூர், ஏப். 26: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (விஏஓ) போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வுகளை கரூர் மாவட்ட மைய நூலகத்தில் ஏப்ரல் 26ம்தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் துவக்கி வைக்கிறார். மாதிரித் தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை வினாத்தாள் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதற்கான மாதிரித் தேர்வு மையங்களாக கரூர் மாவட்ட மைய நூலகம் (140 பேர்), புகளுர் கிளை நூலகம் (39), அரவக்குறிச்சி கிளை நூலகம் (30), குளித்தலை கிளை நூலகம் (76), கிருஷ்ணராயபுரம் கிளை நூலகம் (70),

நூலகம் மற்றும் அறிவுசார் மையம் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் (32) என இநத மையங்களில் 387 பேர் கலந்து கொண்டு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையங்களில் 387 போட்டி தேர்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (விஏஒ) போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள் மற்றும் வினாத்தாள் கலந்துரையாடல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று நடைபெறும். இவ்வாறு மாவட்ட மைய நூலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சனிக்கிழமைதோறும் மாவட்ட மைய நூலகத்தில் குரூப் -4க்கான மாதிரி போட்டித்தேர்வு appeared first on Dinakaran.

Tags : District Central Library ,Karur ,TNPSC ,Tamil Nadu Public Service Commission ,Karur District Central ,Library ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...