×

பஹல்காம் தாக்குதல் குறித்து போஸ்டர்: பா.ஜ. கவுன்சிலர் மீது போலீஸ் வழக்குப் பதிவு


நாகர்கோவில்: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி நாகர்கோவிலில் வடசேரி பகுதியில் பா.ஜ. சார்பில் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இதில் உள்ள வாசகங்கள் இரு தரப்பு இடையே மோதலை ஏற்படுத்தி, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக வடசேரி எஸ்.ஐ. லட்சுமணன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் இந்த போஸ்டரை ஒட்ட ஏற்பாடு செய்த நாகர்கோவில் கேசவதிருப்பாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முருகன் (50), வடசேரி வெள்ளாளர் கீழத்தெருவை சேர்ந்த, மாநகராட்சி 12 வது வார்டு கவுன்சிலரும், பாஜ வடக்கு மண்டல தலைவருமான சுனில் அரசு (32) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post பஹல்காம் தாக்குதல் குறித்து போஸ்டர்: பா.ஜ. கவுன்சிலர் மீது போலீஸ் வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Pahalgam ,BJP ,Nagercoil ,Kashmir ,Vadasseri ,Dinakaran ,
× RELATED சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்...