- புதுக்கோட்டை மாவட்டம்
- விநியோகஸ்தர்கள்
- சங்கம்
- முழக்கம்
- புதுக்கோட்டை
- திலக் திடல்
- புதுக்கோட்டை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம்
- மாநில தலைவர்
- கணேஷ்ராம்
- வர்த்தக சங்கம்
- ஜனாதிபதி
- சாகுல் ஹமீது
- காஷி
- தின மலர்
புதுக்கோட்டை, ஏப். 24: புதுக்கோட்டை மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் காசி, செயலாளர் ராஜசேகரன், பொருளாளர் அருணாசலம், விநாயகா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கார்பரேட் நிறுவனங்களால், சில்லறை வணிகர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிக்கிறது எனவே சில்லறை வணிகத்திற்குள் கார்பரேட்டை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மேல ராஜ வீதியில் உள்ள சில்வர் ஹாலில் நடந்த கூட்டத்தில் குவிக் காம், இ காம் மூலம் சிறு குறு வணிகர்கள் அழிந்து வருவது குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.
The post புதுக்கோட்டை மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: சில்லறை வணிகத்திற்குள் கார்பரேட் கூடாது என முழக்கம் appeared first on Dinakaran.
