×

ஆளுநரின் சட்டவிரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: துணை வேந்தர்கள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த துணை ஜனாதிபதி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவர். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் 3 நாள் மாநாடு நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கிற செயலாகும். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் வருகிற 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்து, மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post ஆளுநரின் சட்டவிரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Governor ,Chennai ,Tamil Nadu ,state ,president ,Selvapperundhakai ,Vice President ,Supreme Court ,Vice ,R.N. Ravi ,Delhi ,
× RELATED சொல்லிட்டாங்க…