×

தெலங்கானாவில் அடுத்தடுத்து சம்பவம்: குரங்குகள் கடித்ததில் மூதாட்டி பலி


திருமலை: தெலங்கானாவில் குரங்குகள் கடித்து மூதாட்டி பலியானார். மேலும் மற்றொரு மூதாட்டியை குரங்குகள் கும்பலாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள தோட்டத்தில் வீட்டின் வெளியே நேற்று மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் அவரது புடவையை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கி கடித்தது. இதில் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் குரங்குகளை விரட்டியடித்து மூதாட்டியை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குரங்குகள் மூதாட்டியை கீழே தள்ளி தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் வாரங்கல் மாவட்டம் பெரிகேடுவில் குரங்கு கடித்ததில் அங்கம்மா(76) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்த சம்பவங்களால் தெலங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகள் தொல்லையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தெலங்கானாவில் அடுத்தடுத்து சம்பவம்: குரங்குகள் கடித்ததில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Karimnagar, Telangana ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...