×

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால் உக்ரைன் -ரஷ்யா போர் நிறுத்த முயற்சியில் இருந்து விலகிவிடுவோம்: அமெரிக்கா திட்டவட்டம்

பாரீஸ்: உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அந்த முயற்சி கைவிடப்படும் என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மேக்ரோ ரூபியோ பாரீசில் ஐரோப்பிய மற்றும் உக்ரைன் தலைவர்களை சந்தித்து பேசினாார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மேக்ரோ ரூபியோ கூறுகையில், ‘‘ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் இருந்து விலகுவார்.

அடுத்த வாரம் லண்டனில் ஒரு புதிய சந்திப்பு நடைபெற உள்ளது. அதிபர் டிரம்பின் நிர்வாகம் போர் நிறுத்த முயற்சியை தொடர்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் அது தீர்க்கமானதாக இருக்கலாம். போர் நிறுத்த முயற்சி சாத்தியமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டத்தை நாங்கள் இப்போது அடைந்துவிட்டோம். ஏனென்றால் சாத்தியமில்லை என்றால் நாங்கள் விலகிவிடுவோம் என்று நினைக்கிறேன். இது எங்களது போர் இல்லை. நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய நிறைய விவகாரங்கள் உள்ளன. எனவே உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தை அமெரிக்க நிர்வாகம் சில நாட்களில் முடிவு செய்ய விரும்புகின்றது” என்றார்.

The post பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால் உக்ரைன் -ரஷ்யா போர் நிறுத்த முயற்சியில் இருந்து விலகிவிடுவோம்: அமெரிக்கா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Ukraine-Russia ,United States ,PARIS ,Ukraine ,Russia ,US ,foreign minister ,State Department Minister ,Macro Rubio ,Dinakaran ,
× RELATED டிரம்ப் தாக்குதல் நடத்தினால்...