×

மாணவர்களுக்கு தூய்மைப்பணி: ஹெச்எம் சஸ்பெண்ட்


வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உமாராணி, தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி இப்பள்ளி வளாகத்தை துடைப்பத்தால் மாணவர்கள் தூய்மை செய்துள்ளனர். மேலும், சுவரின் மீது ஏறி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும் சுத்தம் செய்து உள்ளனர்.

ஆபத்தான நிலையில் மாணவர்கள் சுவர் மீது ஏறி தூய்மைப்படுத்தியதை அவ்வழியாக சென்ற சிலர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சி வைரலானது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் விசாரணை நடத்தி, பள்ளி தலைமை ஆசிரியை உமாராணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவர்களுக்கு தூய்மைப்பணி: ஹெச்எம் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : HM ,Vaniyambadi ,Avaranguppam Government Middle School ,Umarani ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...