×

செங்குன்றத்தில் வக்பு திருத்த சட்டம் எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

 

புழல், ஏப்.12: செங்குன்றம் ஜி.என்.டி சாலை அருகே உள்ள மஸ்ஜிதே ஆயிஷா பள்ளி வாசலில் நேற்று மதியம், வழக்கமான வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடந்தது. அதன்பிறகு, நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிவாசலைச் சேர்ந்த இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் செங்குன்றம் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்ப பெறக்கோரியும் கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து, வக்பு திருத்தச் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். அதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இதேபோல் சோழவரம் பள்ளிவாசல் அருகே ஒன்றிய அரசைக் கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்குன்றம், சோழவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post செங்குன்றத்தில் வக்பு திருத்த சட்டம் எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Muslims ,Sengunram ,Masjid Ayesha ,School ,Sengunram GND Road ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...