×

ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்

*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம்

ஊட்டி : கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதால் சதுப்பு நிலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கோத்தகிரி அருகே உள்ள ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம் கோத்தகிரி நகரின் முக்கிய நீர் ஆதாரம். நகரின் குடி நீர் தேவையில் பாதி அளவை பூர்த்தி செய்யும் இந்த சதுப்பு நிலம் தற்போது கட்டிடக்கழிவுகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து வருகிறது.

தமிழக அரசு இத்தகைய சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக ஒரு வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டும் நடவடிக்கையும் ஏதும் எடுக்கப்படவில்லை.

தற்போது இந்த சதுப்பு நிலத்தில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இதுபோன்ற சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு சதுப்பு நிலத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சதுப்பு நிலங்களை காக்க வேண்டுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என, இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசின் கிரீன் சாம்பியன் அவார்டு பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு கூறினார்.

The post ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Rifle Range Swamp ,Ooty ,Kotagiri Rifle Range Swamp ,Kotagiri ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...