×

துணை முதல்வர் ஷிண்டேயை துரோகி என்று விமர்சித்த காமெடியன் குணால் கம்ரா மீது போலீஸ் வழக்குப்பதிவு: ஸ்டூடியோவை சூறையாடிய சிவசேனா தொண்டர்கள்; இடித்து தள்ளியது மும்பை மாநகராட்சி

மும்பை: பிரபல ஸ்டாண்ட்அப் காமெடியன் குணால் கம்ரா மும்பை கார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, மகாராஷ்டிரா துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஷிண்டேவை துரோகி என வர்ணித்து பாட்டு பாடினார். இதனை 2 நிமிட வீடியோவாக தயாரித்து வெளியிட்டார். இந்த வீடியோ வைரல் ஆனதும் பெரும் சர்ச்சை எழுந்தது. சிவசேனாவினர் கொந்தளித்தனர். அவர்கள் வீடியோ பதிவு செய்யப்பட்ட நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அந்த ஓட்டலையும் ஸ்டூயோவையும் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 40 சிவசேனாவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குணாலை கண்டித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், 2024 தேர்தல் முடிவு, யார் துரோகி என்பதை காட்டி விட்டது. எனவே, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அதே நேரத்தில், கம்ரா மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 353 (1) பி மற்றும் 356 (2) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, பாடல் பதிவு செய்யப்பட்ட ஸ்டூடியோவை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. ஓட்டலின் கீழ்தளத்தில் ஸ்டூடியோ அமைத்துள்ளனர். மாநகராட்சி அனுமதி பெறாமல் இந்த ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இடித்து தள்ளப்பட்டுள்ளது. ஓட்டலும் முறையான அனுமதியுடன்தான் கட்டப்பட்டுள்ளதா? வரைபட அனுமதியை மீறியுள்ளதா என ஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

* தமிழகத்தில் தஞ்சம்
குணால் கம்ரா மும்பை போலீசிடம் நேற்று பேசியுள்ளார். அதில், ‘‘நான் தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறேன். துரோகி என விமர்சித்ததற்காக ஒருபோதும் வருந்தவில்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் இதனை நான் செய்யவில்லை. இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை. தேவைப்பட்டால் எனது வங்கி கணக்கை ஆய்வு செய்து கொள்ளலாம். மிகவும் மட்டரகமானது, துணை முதல்வரை அவமதித்தது என கோர்ட்டு கோரினால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன். மற்றபடி எந்த விதத்திலும் மன்னிப்பு கேட்க முடியாது.

The post துணை முதல்வர் ஷிண்டேயை துரோகி என்று விமர்சித்த காமெடியன் குணால் கம்ரா மீது போலீஸ் வழக்குப்பதிவு: ஸ்டூடியோவை சூறையாடிய சிவசேனா தொண்டர்கள்; இடித்து தள்ளியது மும்பை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Kunal Kamra ,Deputy Chief Minister ,Shinde ,Shiv ,Sena ,Mumbai Corporation ,Mumbai ,Kar ,Maharashtra ,Shiv Sena ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிர துணை முதல்வரை விமர்சித்த...