- ரியா
- சுஷாந்த் சிங் ராஜ்புத்
- சிபிஐ
- மும்பை
- பாலிவுட்
- பேந்திரா, மும்பை
- சுஷாந்த்
- திஷா சாலியன்
- சுஷாந்த் சிங்
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். சுஷாந்தின் மேலாளராக இருந்த திஷா சாலியன் உயிரிழந்த மறு வாரமே, சுஷாந்த்தும் இறந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, சுஷாந்த் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்தது.
ஆனால் சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரபர்த்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை புகார் அளித்தார். இதை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் நான்கரை ஆண்டுகள் விசாரணைக்கு பின் சுஷாந்த் சிங் மரண வழக்கில், சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பாந்த்ராவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் ரியா சக்கரபர்த்தி உள்ளிட்டோருக்கு எந்த தொடர்பும் இல்லை அவரது மரணம் தற்கொலை தான் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
The post நடிகை ரியாவுக்கு தொடர்பு இல்லை நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான்: சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.
