- தெலுங்கானா
- ஏழாம் மலை
- முதல்வர்
- ரேவந்த் ரெட்டி
- திருமலை
- முதல் அமைச்சர்
- ரவீந்திர பாரதி
- ஹைதராபாத், தெலுங்கானா
- சுவாமி
- திருப்பதி எலோமலையன் கோயில்
- ஏழு முத்திரைகள்
- ரேவந்த் ரெட்டி
- தின மலர்
திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதியில் அரசு சார்பில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு தெலங்கானா மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களை ஏற்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் தேவஸ்தான அதிகாரிகளிடமும்.
ஆந்திர அரசிடமும் கேட்பதில் என்ன பயன்? வாரத்தில் இரண்டு நாட்கள் என அவர்கள் கொடுக்கும் பிச்சை எதற்கு. ஆந்திராவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இருந்தால், தெலங்கானாவில் யாதகிரிகுட்டா தேவஸ்தானம் இல்லையா? பத்ராசலத்தில் ராமர் கோயில் இல்லையா? மாநிலத்தில் சிவன் கோயில்கள் எண்ணிக்கை என்ன குறைவாகவா உள்ளது. திருமலைக்கு செல்லாமல், தெலங்கானாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்றார்.
The post தெலங்கானா மக்கள் பிரதிநிதிகள் ஏழுமலையான் தரிசனத்துக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.
