×

பாஜ நிர்வாகி கார் மோதி 2 பேர் பலி

பணகுடி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் (37), வினோத் (28). கட்டிட தொழிலாளிகளான இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் வேலை நிமித்தமாக காவல்கிணறுக்கு சென்றுவிட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பணகுடி அருகே வந்தபோது, ஆவரைகுளம், பிள்ளையார் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாஜ நெல்லை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அசோகனின் புதிய சொகுசு கார், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் நாகராஜன், வினோத் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து பாஜ நிர்வாகியின் கார் டிரைவரான பாலகுமாரிடம் விசாரணை நடத்தினர். இதில், 2 வாரங்களுக்கு முன்பு தான் பாஜ நிர்வாகி புதிதாக சொகுசு காரை வாங்கியுள்ளார். இன்னும் பதிவெண் கூட வாங்கவில்லை என்பது தெரிய வந்தது.

The post பாஜ நிர்வாகி கார் மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : BAJA ,Panakudi ,Nagarajan ,Vinod ,Kanyakumari district ,Pudukkada ,Panakudi, Awaraikulam, Pillaiyar Residence ,Bajaj ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி விவகாரம் இன்னைக்கு லீவு நோ கொஸ்டின்: ஓபிஎஸ் எஸ்கேப்