×

திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று முதல் 25 நாட்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

திருநெல்வேலி: திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பின்வரும் ரயில்கள் 20.03.2025 (இன்று) முதல் 13.04.2025 வரை (25 நாட்கள்) ரத்து செய்யப்படுகின்றன.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் (மார்ச் 20) இன்று முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரயில் (மார்ச் 20) இன்று முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

The post திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று முதல் 25 நாட்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Tiruchendur ,Southern Railway ,Dinakaran ,
× RELATED அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில்...