- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
- திருமாவளவன்
- சென்னை
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- சிகே
- இலங்கை கடற்படை
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; மார்ச் 18 2025 அன்று இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அந்த மூன்று பேர் உட்பட ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 110 தமிழ்நாடு மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
கடந்த மூன்று மாதங்களில் இதுவரையில் 10 முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன அரசின் தலையீடு இதில் இருப்பதாக இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் தலையீடு மேலும் பதற்றத்தை உருவாக்கும் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்வி எழும். தினக்கூலிக்காக பணியாற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அவர்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் நெருக்கடிகள் இல்லாமல் வாரம் தோறும் குறிப்பிட்ட நாட்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்திடும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
