- ஆர்.கே
- ஆர்.கே.ஹூட்
- ஆர். கே. நந்தகோபால்
- பெட்டி யூனியம், ஸ்ரீகாளிகபுரம்
- ஸ்ரீபிரகாமுத்தூர்
- கோமதி
- Manimangalam
- தின மலர்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் தாயுடன் வசித்து வருபவர் நந்தகோபால் (36). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். திருமணமானதையடுத்து மனைவி கோமதி மற்றும் குழந்தைகளுடன் மணிமங்கலம் அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் கடந்த 6 மாதங்களாக வாடகை வீட்டில் நந்தகோபால் வசித்து வருகிறார்.
இதனால், ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் நந்தகோபாலின் தாயார் மட்டும் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 14ம் தேதி, ஸ்ரீ காளிகாபுரம் வீட்டிற்கு வந்து, இரவில் பீரோவில் தங்க நகைகளை வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நந்தகோபாலின் சித்தப்பா பார்த்திபன் என்பவர், நந்தகோபாலை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டின் மெயின் கேட் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட், உள் கதவு, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 7 சவரன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நந்தகோபால், இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post ஆர்.கே.பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு appeared first on Dinakaran.
