×

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

அவனியாபுரம்: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘2006ம் ஆண்டு தேமுதிக தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். அதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் வந்துள்ள விவசாயிகளுக்கான திட்டங்களையும், விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கான திட்டங்களையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது’’ என்றார்.

தற்போது போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்களே என்ற கேள்விக்கு, ‘‘கடந்த ஆட்சியிலும் ஆளுங்கட்சியை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வது காலங்காலமாக நடைபெறும் வழக்கம் தான்’’ என்றார். பட்ஜெட்டை தேமுதிக பாராட்டியிருப்பதை 2026 தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக பார்க்கலாமா என்ற கேள்விக்கு, ‘‘தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம்’’ என்றார்.

The post கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,AVANIAPURAM ,PREMALATHA VIJAYAKANT ,DEMUTIKA GENERAL SECRETARY ,PREMALADA ,VIJAYAKANT ,MADURAI AIRPORT ,TAMIL NADU ,DEMUTIKA ELECTION ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…