×

எழும்பூரில் 21ம் தேதி அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை: அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வருகிற 21ம் தேதி எழும்பூரில் நடக்கிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது. ஜெயலலிதா வழியில் இந்த ஆண்டும், அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21ம் தேதி (வெள்ளி) மாலை 5.30 மணியளவில் எழும்பூர், புகாரி சிராஜ் ஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார். நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய மக்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

The post எழும்பூரில் 21ம் தேதி அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Iftar ,AIADMK ,Egmore ,Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…