×

என் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது: மிஷ்கின் ‘ஓப்பன் டாக்’

சென்னை: மேட்னி ஃபோல்க்ஸ் சார்பில் ஜி.பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் புதியவர் கவிதா இயக்கியுள்ள படம், ‘ஆதாரம்’. இதில் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார், ஸ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தர்ம பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கவிதா, ராசி தங்கதுரை வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் பேசியதாவது:

இயக்குனர் கவிதாவின் தந்தை டி.என்.பாலுவின் ‘சங்கர்லால்’ முதல் பல படங்களுக்கு நான் தீவிர ரசிகன். அப்படத்தின் பாதிப்பில்தான் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பி என்ற குற்றச்சாட்டு வந்துகொண்டே இருக்கிறது. என்மீது கூட நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. உலகம் முழுவதும் இருப்பது 6 கதைகள்தான். அதுதான் மீண்டும், மீண்டும் படமாக்கப்படுகின்றன. எல்லோரும் ஒரே கதையைத்தான் மீண்டும், மீண்டும் படமாக்கி வருகிறோம். என் முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’ வெளியான முதல் 7 நாட்கள் வரை தோல்விதான். பிறகு 8வது நாளில் இருந்து வெற்றிபெற்றது. ஒரு தோல்வியில் இருந்துதான் படம் இயக்குவது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். நான் விஜய்யின் ‘லியோ’ படத்தில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளேன். என்னிடம் எல்லோரும் அப்டேட் கேட்பதால்தான் அப்படங்களைப் பற்றி சொன்னேன்.

The post என் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது: மிஷ்கின் ‘ஓப்பன் டாக்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Madney ,Folks ,G. Pradeep Kumar ,Kavitha ,Asha Maidin ,Ajit Vignesh ,Pooja Shankar ,Radavi ,Y. GG Mahendran ,Mahendran ,N.N. ,Rajesh Kumar ,Srievats ,Dharma Prakash ,Mishkin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அறிகுறியுள்ள எல்லோருக்கும் பரிசோதனை...