×

காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் முகாம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் பெற வேண்டும் என்பதில், காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. அதாவது, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தாங்களே களம் இறங்க, அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விருப்பம் தெரிவித்திருந்தார். கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு கிடைத்து விடும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இதனால், அக்கட்சியைச் சேர்ந்த மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளருமான ஆர்.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ், ராஜப்பா ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும், தமிழ்நாடு அரசின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இடையே ஆலோசனைக்கு பிறகே, அத்தொகுதி யாருக்கு ஒதுக்கப்படுகிறது? வேட்பாளர் யார்? என்பது தெரிய வரும். அநேகமாக, இன்று (10ம் தேதி) மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது யார்? என்பது குறித்து முடிவு தெரிந்து விடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் முகாம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,Erode East ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி...