- கோடியக்கரை
- ஸ்ரீ
- கடற்படை
- காரைக்கால்
- செல்வமணி
- கீழக்காசாகுடி
- அன்பழகன்
- பாண்டியன்
- செல்வகுமார்
- ரிகாசி
- கலைமணி
- மயிலாடுதுறை
- தங்கதுரை
- அபிட்
- ரமேஷ்
- ராஜசேகர்
- நாகப்பட்டினம்
- இலங்கை கடற்படை
- தின மலர்
காரைக்கால்: காரைக்கால் கீழகாசாக்குடியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த அன்பழகன், பாண்டியன், செல்வகுமார், ரிகாஸி, மயிலாடுதுறையை சேர்ந்த கலைமணி, தங்கத்துரை, செல்வகுமார், அபித், ரமேஷ், நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கப்பலில் ேராந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்ததோடு, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் 10 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் விசைப்படகு, உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 10 மீனவர்களிடம் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் இன்று (10ம்தேதி) திருகோணமலை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவலை இந்திய கடலோர காவல் படைக்கு, இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
The post கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது துப்பாக்கி முனையில் 10 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.