×

நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: நெடுஞ்சாலைத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு தலைமை தாங்கினார்.

நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் கோவிந்தராஜன், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்னவிஸ் பெர்னாண்டோ, உதவி பொறியாளர்கள் பிரசாந்த், அரவிந்த், இளநிலை பொறியாளர் பூபால சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியை பயிற்சி உதவி கலெக்டர் ஆயுஸ் குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

 

The post நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Road Safety Awareness Rally ,Highways Department ,Tiruvallur ,Construction and Maintenance Department ,Thiruvallur District Highways Department ,Collector ,Office ,Dinakaran ,
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி