×

சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு


சென்னை: சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னைக்கு தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டிஎம்சி; தற்போது 15.560 டிஎம்சி குடிநீர் கொள்ளளவு இருப்பு உள்ளது. போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. திமுக ஆட்சிக்கு வந்தபோது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1,040 எம்.எல்.டி. அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பணிகள் முடிவடைந்த பிறகு வடசென்னை மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள் என்று கூறினார்.

The post சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K. N. Nehru ,
× RELATED போதுமான அளவு குடிநீர் இருப்பு...