×

தர்மபுரியில் நாளை பணியாளர்கள் நிகழ்ச்சி

தர்மபுரி, ஜன.9: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், வரவு செலவு திட்டம் 2024-25 கூட்டுறவு துறைக்கான 27.6.2024 தேதியில் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சரால், அறிவிக்கப்பட்ட அறிவிப்பு எண்-03, கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, பணியாளர் நாள் நிகழ்வு, தர்மபுரி மண்டல இணை பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நாளை (10ம் தேதி) நடைபெறவுள்ளது என தர்மபுரி இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

The post தர்மபுரியில் நாளை பணியாளர்கள் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu Legislative Assembly ,Minister of Cooperatives ,
× RELATED பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின்...