×

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தொழிலாளர் சங்கம் கண்டனம்: பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிபடுத்திய விசாரணைக் குழு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது விசாரணை நடத்த குழு அமைக்க துணை வேந்தருக்கு தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய துணை வேந்தருக்கு உயர்கல்வி துறை செயலாளர் இரண்டு முறை கடிதம் அனுப்பினார். ஆனாலும் பதிவாளர் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்காத துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலை பணி ஓய்வு பெறவும் அனுமதித்தார்.

இந்த நிலையில், துணை வேந்தரின் செயலை கண்டித்தும், பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை கோரியும் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் 3 மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கில் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ள துணை வேந்தர் ஜெகநாதன் வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸும் அனுப்பியுள்ளார். துணை வேந்தரின் ஜனநாயக விரோத செயலை கண்டித்துள்ள தொழிலாளர்கள் சங்கத்தினர், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தொழிலாளர் சங்கம் கண்டனம்: பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிபடுத்திய விசாரணைக் குழு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Labor union ,SALEM ,LABOUR UNION ,SALEM PERIYAR UNIVERSITY ,Dinakaran ,
× RELATED சேலம் எருமாபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்