சென்னை: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை பெருங்குளத்தூரை சேர்ந்தவர் யுகேஷ் என்பவர் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து இன்று காலை வண்டலூர் – மீஞ்சூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருக்கும்போது காரின் முன்பகுதியிலிருந்து லேசாக புகை வந்துள்ளது. உடனே காரை நிறுத்தி எதனால் புகை வந்தது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே கார் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் எரிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.