×

பொங்கல் பண்டிகை : ஒரு குடும்ப அட்டைக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு ரூ.0.50 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு

சென்னை : பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் கீழ் செயல்படும் நியாய விலை கடை மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஒரு குடும்ப அட்டைக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ரூ.0.50 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணை பின்வருமாறு..

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிதித் தொடர்புடைய பரிந்துரைகளின் மீது தனித்தனியே அரசின் முடிவு தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையில் பரிந்துரை எண் 6-இல், நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.0.50 வழங்குவது தொடர்பாக பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைத் திட்டங்களை அறிவிக்கும்போது ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50/- வீதம் வழங்கலாம்தற்போது, பார்வை (3) இல் காணும் அரசாணையின்படி பொங்கல் திருநாள் 2025 முன்னிட்டு அரசின் சிறப்புச் சேவை திட்டமான பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 விநியோகத் திட்டத்தினை செயல்படுத்தும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படும் குடும்ப அட்டைகளின் அடிப்படையில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50 வீதம் வழங்க சம்மந்தப்பட்ட சங்கங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அத்தொகை நியாயவிலைக்கடை பணியாளர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அச்செலவுகள் முதலில் சங்கங்களின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு, பின்வார் அச்செலவுகள் அந்த ஆண்டிற்குரிய மானியத் தொகைக்கான முன்மொழிவில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இக்கடிதம் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகை : ஒரு குடும்ப அட்டைக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு ரூ.0.50 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு