×

பால் உற்பத்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஜன.8: பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மனோஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும்.

கால்நடை தீவனங்களை 50 சத மானியத்தில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பாலை வாகனத்தில் ஏற்றும் முன்பாக தரம் மற்றும் அளவுகளை எழுதி தர வேண்டும். கால்நடைகளுக்கான மருந்துகளை தடையின்றி வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் பெருமாள் ராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

The post பால் உற்பத்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Milk ,Producers ,Association ,Virudhunagar ,Inamretiyapatti ,Tamil Nadu Milk Producers Association ,District ,Manoj Kumar ,Dinakaran ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...