×

பஸ் மோதி முதியவர் படுகாயம்

போடி, ஜன.8: தேனி மாவட் டம், போடி அருகே சங்கராபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையன்(71). விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது டூவீலரில் நாகலாபுரம் விலக்கிலிருந்து சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியதில் வெள்ளையன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளையனின் மகன் வாசகர்(39) அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. கணேசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post பஸ் மோதி முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Vellayan ,Shankarapuram West Street ,Theni Mawat ,Nagalapuram ,Shankarapuram ,
× RELATED போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி...