- திமுக
- தமிழ்
- தமிழ்நாடு
- கவர்னர்
- ராமநாதபுரம், சிவகங்கை
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தமிழ்நாடு கவர்னர்
- ரவி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இராமநாதபுரம்,
- தின மலர்
ராமநாதபுரம்/சிவகங்கை, ஜன.8: தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் ராமநாதபுரம், சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். இதனை கண்டித்து நேற்று மாநில முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டிணம்காத்தான் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பாரகு முன்னிலை வகித்தனர். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் நிலோபர், பிரபாகரன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம்முகைதீன், ஜெயபாலன், பூபதிமணி கோவிந்தராஜ், சண்முகநாதன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் திருமாறன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் சேர்மன் புல்லாணி உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தனர். இதில் காரைக்குடி மேயர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில்,
ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், நெடுஞ்செழியன், கேஎஸ்.ஆனந்த், சின்னத்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஆதிதிராவிட அணி மாவட்டத் தலைவர் கொத்தமங்கலம் சேது, சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், அயூப்கான், நகர் திமுக ஹரிகரன், காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோதண்டபாணி, ஒன்றிய மாணவர் அணி சதீஸ்குமார், தட்சனேந்தல் அக்கினிச்சாமி மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ராமநாதபுரம்,சிவகங்கையில் 800 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.