×

போச்சம்பள்ளியில் பொங்கலுக்கு முன்பே சந்தைக்கு வந்த செங்கரும்பு: ஜோடி ₹100க்கு விற்பனை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் பொங்கலுக்கு முன்பே செங்கரும்பு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தை பொங்கலை எதிர்பார்த்து விவசாயிகள் செங்கரும்புகளை பயிரிட்டுள்ளனர். பரவலாக மழை பெய்ததால், நடப்பாண்டு கரும்பு நன்கு விளைந்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து செங்கரும்பு கொள்முதல் நடவடிக்கையில், கூட்டுறவு சங்க அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கலுக்கு முன்பே போச்சம்பள்ளி பகுதியில் செங்கரும்புகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. நல்ல உயரத்துடன், திரட்சியாக காணப்படும் கரும்புகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். வரும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கரும்பு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், பொங்கல் பண்டிகையின்போது அனைத்து கரும்புகளும் விற்றுத் தீர்ந்து விடும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது, ஜோடி கரும்பு ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post போச்சம்பள்ளியில் பொங்கலுக்கு முன்பே சந்தைக்கு வந்த செங்கரும்பு: ஜோடி ₹100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pongal ,Pochampally ,Krishnagiri ,Thai Pongal ,Dinakaran ,
× RELATED பொங்கல் விழாவையொட்டி...