×

நயன்தாரா மீது வழக்கு.. இறுதி விசாரணையை ஜன.22க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: திருமண ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் பட பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக, நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி, வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைத்தார்.

The post நயன்தாரா மீது வழக்கு.. இறுதி விசாரணையை ஜன.22க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Nayanthara ,Madras High Court ,Chennai ,Dhanush ,Wonder Bar ,Dinakaran ,
× RELATED கைதிகள் தயாரிப்பு பொருள் விற்பனையில்...