சாத்தான்குளம், ஜன. 7: பேய்க்குளம் பகுதி கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை நடத்தி 5 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாகவுகம் புகார் வந்தது. இதையடுத்து ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், சுனில்குமார், ஞானராஜ், அஸ்வின், மகேஸ்குமார் ஆகியோர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட 5 கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன், 5 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகித்தனர். ஓட்டல், பொது இடத்தில் கடை நடத்துபவர்கள் சுகாதார முறையில் வைத்திருக்க வேண்டும், பொது இடங்களில் கழிவுநீர், பொருட்கள் வீசுவதை நிறுத்த வேண்டும். சுகாதார முறையில் கடைகள் செயல்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
The post பேய்க்குளம் பகுதி கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.