×

திருச்செந்தூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உடன்குடி, ஜன. 7: திருச்செந்தூரில் இன்று மின் நுகர்வோர் கூட்டம் நடைபெறுவதாக திருச்செந்தூர் மின்வாரிய விநியோகப்பிரிவு பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் கோட்ட மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இன்று (7ம் தேதி) திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு அவரவர் கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருச்செந்தூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Consumer Deduction ,Tricendour ,Udonkudi ,Vijayasankarabandian ,Tricendur ,Thiruchendur Kota Monthly Consumer Reduction Day Meeting ,Reduction ,Dinakaran ,
× RELATED குலசை கோயிலில் உண்டியல் வசூல் ₹17.24 லட்சம்