×

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. நேபாளம், சீனா, திபெத் எல்லைப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் திபெத்தில் 30 பேர் உயிரிழந்தனர். நேபாள நிலநடுக்கத்தால் டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : POWERFUL EARTHQUAKE ON ,NEPAL-TIBET ,Kathmandu ,Nepal-Tibet border ,Nepal ,China ,Tibet ,Nepal—Tibet ,Dinakaran ,
× RELATED நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட...