சென்னை: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. வழக்கம் போல பேரவைக் கூடியதும், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருநது வெளியேறினார். இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்பட்டதால் சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து வெளியேற்றப்பட்டனர். பேரவை தொடங்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி; அண்ணா பல்கலை. விவகாரத்தில் அரசுக்கு எதிராக அல்ல; மாணவிக்கு நீதி கேட்டே போராட்டம். அண்ணா பல்கலை. விவகாரத்தில் அ.தி.மு.க.வின் அழுத்தத்தால் தான் மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் புறக்கணிக்கவில்லை. ஆளுநர் உரையாற்றிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
The post சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் appeared first on Dinakaran.