×

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை(ஜன.07) காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் ஆளுநர் அத்துமீறுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு மீதுள்ள தமிழ்நாட்டு மக்கள் கோபத்தை திசைமாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

The post தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu ,Dimuka ,Chennai ,Kandana ,Union Government ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர்