×

கிழக்கு திசை காற்று மாறுபாடு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வட கிழக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். பொதுவாக காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. 7ம் தேதியில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதே நிலை 10ம் தேதி வரை நீடிக்கும். 11ம் தேதியில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கனமழை பெய்யும்.

The post கிழக்கு திசை காற்று மாறுபாடு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,North East ,Puducherry ,Karaikal ,
× RELATED தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு