கரூர், ஜன. 4: நான்கு வார வயதுடைய 40 அசில் இனக்கோழிக்குஞ்சுகளை 50 சதவீத மானியத்தில் வழங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை விதவைகள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கான மேம்பாட்டு திட்ட பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெண் பயனாளிகள் பொருளாதாரத்தில் ஏழ்மையானவர்களாகவும், புறக்கடை கோழி வளர்க்கத் தயாராகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாள்கள், விதவைகள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் சுய உதவிக்குழு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளி முந்தைய ஆண்டுக்கான கோழி அபிவிருத்தி திட்டத்தில் பயனடைந்திருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை நகல், சாதி சான்றிதழ் நகல் (பழங்குடியினத்தவர்கள் மட்டும்), குடும்ப அட்டை நகல், புகைப்படம் இணைத்து வழங்க வேண்டும். மேலும், கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் எனவும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விதவை, ஆதரவற்ற பெண்கள் வாழ்வாதாரத்துக்காக மானியத்தில் கோழிக்குஞ்சுகள் appeared first on Dinakaran.