×

வீட்டில் தனியாக இருந்தபோது 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது

பெரம்பூர்: வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 38 வயது பெண், அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவருக்கு 18 மற்றும் 13 வயதில் மகள்கள் உள்ளனர். இவரது 13 வயது மகளுக்கு உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், எதிர் வீட்டில் வசித்துவரும் பெண் ஒருவரை பார்க்க இளையராஜா என்பவர் வந்துள்ளார். அப்போது அந்த நபர், தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இளையராஜாவை விரட்டிவிட்டுவிட்டு சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 1வது தெருவை சேர்ந்த இளையராஜாவை கைது செய்தனர். தனியார் கம்பெனியில் பணியாற்றிவரும் மேலாளர் ஒருவருக்கு கார் டிரைவராக உள்ளார். மனைவி, மகள் உள்ளனர். இவரது முதலாளி வெளிநாட்டுக்கு சென்றதால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றிவந்தபோது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் தனியாக இருந்தபோது 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : PERAMPUR ,Pulianthopu ,Chennai ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில் வீடு...