சென்னை: ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளி பயணியை தாக்கிய தலைமைக் காவலர் பழனி என்பவர் மீது திருவாரூர் ரயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாற்றுத் திறனாளியை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்ற மாற்றுத்திறனாளி பயணம் செய்துள்ளார். நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் போலீசார் உள்பட 3 பேர் ரயில் பெட்டியின் கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் யாரும் கதவை திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
திருவாரூரில் ரயில் நின்ற போது பயணி ஒருவர் இறங்குவதற்காக கதவை திறந்ததும் உள்ளே சென்ற போலீசார் கருணாநிதியை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார். கருணாநிதி அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தலைமைக் காவலர் பழனி என்பவர் மீது திருவாரூர் ரயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post ரயிலில் மாற்றுத் திறனாளி பயணியை தாக்கிய விவகாரம்: தலைமைக் காவலர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.