×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் ₹4.26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு வந்தது

தஞ்சாவூர், ஜன.3: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 4 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டடங்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று திறந்து வைத்தார்.

மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்பி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றியம் ராராமுத்திரைக்கோட்டை ஊராட்சியில் ரூ.17.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் திட்ட கட்டிடம், கீழகோவில்பது ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம செயலக கட்டிடம், அருந்தவபுரம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கருப்பமுதலியார்கோட்டை ஊராட்சியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், உக்கடை ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், நெடுவாசல் ஊராட்சியில் 5.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் திட்ட கட்டிடம், பள்ளியூர் ஊராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய நேரடி நெல்கொள்முதல் நிலைய கட்டிடம், தேவராயன்பேட்டை ஊராட்சியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், கோபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.29.37 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், ராமானுஜபுரம் ஊராட்சியில் ரூ.14.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், திருமன்டன்குடி ஊராட்சியில் ரூ.29.12 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், ஆளவந்தபுரம் ஊராட்சியில் ரூ.29.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், திருவிடைமருதூர் ஒன்றியம் சீனிவாசநல்லூர் ஊராட்சியில் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், வில்லியவரம்பாள்ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கோவிந்தபுரம் ஊராட்சியில் ரூ.12.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் திட்ட கட்டிடம், திருப்பனந்தாள் ஒன்றியம் துகிலி ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், கீழசூரியமூளை ஊராட்சியில் ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், குலசேகரநல்லூர் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், வேளூர் ஊராட்சியில் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் திட்ட கட்டிடம் என மொத்தம் ரூ. 4 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டப் பணிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:
அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியங்களில் ரூ. 4 கோடியே 26 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மேம்பாடு பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி உள்ளது. அங்கன்வாடி மைய கட்டடம், பொதுவிநியோகக் திட்ட கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம். கிராம செயலக கட்டடம். அங்கன்வாடி மைய கட்டடம், நேரடி நெல்கொள்முதல் நிலைய கட்டடம் போன்ற சிறப்பான திட்டப்பணிகளுக்கான புதிய கட்டடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1000 உயர்கல்வி பெறுகிற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 போன்ற திட்டங்களும், மக்களைத் தேடி மருத்துவம். \”உங்களைத் தேடி உங்கள் ஊரில்\” போன்ற திட்டங்கள் முன்னேற்ற திட்டங்களாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கோவத்தக்குடி ஊராட்சியில் மாபெரும் மரக்கன்று நடும் விழாவினை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், முன்னாள் எம்பி ராமலிங்கம், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துசெல்வம் , ஒன்றிய குழுத் தலைவர்கள் கலைச்செல்வன் (அம்மாபேட்டை), சுமதி கண்ணதாசன் (பாபநாசம்), சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) தேவிரவிச்சந்திரன் (திருப்பனந்தாள்) திருப்பனந்தாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அண்ணாதுரை , வட்டாட்சியர்கள் சண்முகம் (கும்பகோணம்), பாக்யராஜ் (திருவிடைமருதூர்), செந்தில்குமார் (பாபநாசம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் ₹4.26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Minister of Higher Education ,Kovi ,SEZHIAN ,Ammapettai ,Babanasam ,Thiruvidaymarathur ,Tirupananda ,Dinakaran ,
× RELATED பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக...