கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம் சக்தியவேடு பகுதியைச் சேர்ந்த பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி (41). இவரது மூத்த மகள் கைத்திகா (18) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிடெக் படித்து வருகிறார். இந்தநிலையில் மகளுக்கு விடுமுறை முடிந்து அவரை விஜயவாடாவில் விட்டுவிட்டு அங்கிருந்து நேற்று காலை 10.30 மணிக்கு கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்னை நோக்கி பாலாஜி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரெயில் நிலையத்தை அந்த ரெயில் மாலை பிளாட்பாரம் 3 வழியாக கடந்து சென்றது. அப்போது கவரப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து சத்தியவேடுக்கு விரைவாக வீட்டிற்கு சென்று விடலாம் என கருதிய பாலாஜி, ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது ரயிலுக்குள் இழுக்கப்பட்டு அவர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் சக்கரத்தில் சிக்கி கடை உரிமையாளர் பலி appeared first on Dinakaran.