×

ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நமது இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நமது இயக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். சென்னை சைதாப்பேட்டையில் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பேசி வருகிறார். அதில்,

மகளிருக்கு திமுக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

புத்தாண்டு பிறந்து நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது, மிகவும் மகிழ்ச்சி. பெண்கள் உரிமை, முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றவே திமுக உருவாக்கப்பட்டது. அரசு பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சொத்துகளில் பெண்களுக்கு சமஉரிமை அளித்தது திமுக அரசு. திமுகவின் கொள்கைகளில் பாலின சமத்துவம் மிக முக்கியமானது. பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் வகையில் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் உயர்ந்தால்தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும். திமுக ஆட்சியில் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் 2000 பெண்களுக்கு டாலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது இவ்வாறு தெரிவித்தார்.

The post ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நமது இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister ,Skills Development Centre ,Saithappetta, Chennai ,Dimuka government ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...