×

நாகப்பட்டினம் பாப்பாக்கோயில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் 19ம் ஆண்டு நிறுவனர் நாள்

நாகப்பட்டினம்,ஜன.1: நாகப்பட்டினம் பாப்பாக்கோயில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் சார்பாக 19ம் ஆண்டு நிறுவனர் நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் செயலர் த.மகேஸ்வரன் வரவேற்றார். நகராட்சி பொறியாளர் மற்றும் பட்டிமன்ற நடுவர் நாகை. நாகராஜன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் ஜீவானந்தம் பேசினார். சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் த.ஆனந்த முன்னிலை வகித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதை சொல்லி எனப் பன்முகத்தன்மை கொண்ட பேச்சாளர் பவா.செல்லதுரை சிறப்புரையாற்றினார். இறுதியாக சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் த.சங்கர் நன்றி கூறினார்.

The post நாகப்பட்டினம் பாப்பாக்கோயில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் 19ம் ஆண்டு நிறுவனர் நாள் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Papakoil ,Sir ,Isaac Newton Educational Institutions 19th Anniversary Founder's Day ,Nagapattinam Papakoil ,Isaac Newton Educational Institutions ,Founder's Day ,T. Maheswaran ,Municipal Engineer ,Board ,of Trustees ,Nagai. Nagarajan ,Sir Isaac Newton Educational Institutions 19th Anniversary Founder's Day ,Dinakaran ,
× RELATED திருக்குவளை, சாட்டியக்குடி பகுதியில்...