×

புத்தாண்டு கொண்டாட காரைக்கால் வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி

காரைக்கால்: நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் விஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென்று அலையில் சிக்கினர். இதல் பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாறையில் சிக்கி விஷ்ணு உயிரிழந்தார். காரைக்கால் அடுத்த புதுத்துறை பகுதி சேர்ந்த ரமேஷ் மகன் நிசன்ராஜ் (17). 12ம் வகுப்பு படித்து வந்த இவர், காரைக்கால் கடலில் நேற்று குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார்.

The post புத்தாண்டு கொண்டாட காரைக்கால் வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Karaikal ,New Year ,Sivakumar ,Nagapattinam ,Vishnu ,Priyadarshini ,
× RELATED ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025...